School History

பள்ளி வரலாறு

தருமமிகு சென்னையில், இராயபுரம் பகுதியில் அமைந்துள்ள சிங்கராத் தோட்டத்தில் கருமமிகு இளைஞர்களின் பெருமுயற்சியால் 11.10.1976 அன்று சிங்கராத் தோட்டம் 24 மனை தெலுங்கு செட்டியார் இளைஞர் சங்கம் என்ற ஓர் அமைப்பினை இப்பகுதி வாழ் இளைஞரெல்லாம் ஒருங்கிணைந்து ஏற்படுத்தி, சீரான முறையில் செயல்படுத்தும் வகையில் முறையாகப் பதிவு செய்து, இச்சமூக மக்கட்குப் பல்வேறு நற்பணிகளை ஆற்றிடும் வகையில் அமைந்த மேற்படி சங்கத்தினரின் பெருமுயற்சியால், திருமிகு. டாக்டர்.சிவா.நடராஜன்.,M.A.,M.COM.,B.ED.,L.L.B.,PH.D., அவர்களின் மேலான ஆலோசனை மற்றும் அறிவுரைகள் பேரிலும் சென்னை மகர் 24 மனை தெலுங்கு செட்டி கல்விக்குழு என்றதோர் அமைப்பினை ஏற்படுத்தி, முறையாகப் பதிவு செய்து 26.09.1981 அன்று முதல் செயல் புரிந்து, மேற்படி இளைஞர் சங்கத்தினர் அளித்த பெரு நிதியம் நன்கொடைத் தொகை ரூ.115000-இன் துணைக்கொண்டும் மேற்படி இளைஞர் சங்கத்தினர் கல்விக்குழுவினர் மற்றும் S.I.A.C அறக்கட்டளையினரின் பெருமுயற்சியாலும் 37 ஆண்டுகளாக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்த வள்ளல் S.I அழகர்சாமி செட்டியார் தெலுங்கு செட்டியார் தர்ம கல்வி ஸ்தாபனத்திற்குரிய கட்டிடத்தை மீளப்பெற்று, நல் இதயம் படைத்த நம் சமூகத்தினரும், பிற சமூகத்தினரும் அளித்த நன்கொடைகளின் வாயிலாகவும் சென்னை, இராயபுரம் ஆதம் சாயபு தெரு 2&3 ஆம் எண்ணில் அமைந்துள்ள மேற்படி தர்ம கல்வி ஸ்தாபனத்தாரிடமிருந்து பெற்ற கட்டிடத்தை சீரமைத்துச் செப்பனிட்டு 6.7.1983 அன்று தமிழக கல்வியமைச்சர் மாண்புமிகு திரு.C.அரங்கநாயகம் M.A .,B.T.B.L., அவர்கள் பொற்கரங்களால் வள்ளல் எஸ்.ஐ அழகர்சாமி செட்டியார் நடுநிலைப்பப்ள்ளியினை திறந்து வைக்கப்பெற்றதையொட்டி 6.7.1983 அன்று முதல் 162 மாணவர்களையும் 37 மாணவிகளையும் ( ஆக மொத்தம் 199), தலைமையாசிரியர் உட்பட 5 ஆசிரியர்களையும் கொண்டு 6 ஆம் வகுப்பில் 3 பிரிவும் 7 மற்றும் 8 ம் வகுப்பில் ஒவ்வொரு பிரிவும் (ஆக மொத்தம் 5 பிரிவுகள் ) கொண்ட நடுநிலைப்பள்ளியாக இயங்கத் தொடங்கியது

8.11.1983 அன்று இப்பள்ளியின் அங்கீகாரம் பள்ளி துவங்கிய அன்றிலிருந்து சென்னை முதன்மை கல்வி அலுவலர் திருமிகு.T.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் வழங்கப்பெற்றது.

இப்பள்ளியினைத் துவங்கி சீரும் சிறப்புமாக தரமிகு கல்வியினை இப்பகுதி வாழ் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் கல்வி கற்றிடும் வகையில் இப்பள்ளி கல்விக் குழுவினருடன் முழு மனதுடனான ஒத்துழைப்பினை மனமுவந்து நல்கிய திருமிகு மாவீரன் ஜேப்பியார் M.A., M.L.C., அவர்களுக்கும் அவரை இப்பணியில் ஈடுபட கல்விக் குழுவிற்கு உறுதுணையாய் நின்ற திரு.கட்பீஸ் G.வரதன் அவர்களுக்கும், திரு.இரா.சோமசுந்தரம் அவர்களுக்கும், அரும்பாடுபட்ட நம்மினப் பெரியவர் திரு.K.குசால்தாஸ் EX.M.C., அவர்களுக்கும் சென்னை முதன்மைக்கக்கல்வி அலுவலர் திருமிகு.T.கிருஷ்ணமூர்த்தி B.SC.,B.T., அவர்களுக்கும், சென்னை கிழக்கு மாவட்டக் கல்வி அலுவலர் திருமிகு.டாக்டர் சிவா நடராஜன் M.A.,M.COM.,M.ED.,LLB.,PH.D., அவர்களுக்கும் ஜார்ஜ் நகர் சரகப் பள்ளி துணை ஆய்வாளர் திரு.P.சென்னையன் M.A.,B.SC.,M.ED., அவர்கட்கும் இந்த சமூகம் மனமார்ந்த நன்றியினை காணிக்கையாகச் செலுத்துகின்றது.

இப்பள்ளியை நடுநிலைப் பள்ளியாகத் துவங்கிய அன்றிலிருந்து திரு.A.செல்வம் அவர்களைத் தலைவராகவும் திரு.T.K.M.ராஜீ அவர்களை துணைத்தலைவராகவும் திரு.S.P.இராமசாமி அவர்களைச செயலாளராகவும், திரு.கட்பீஸ்G.வரதன் அவர்களை துணை செயலாளராகவும், திரு.G.ஆறுமுகம் அவர்களைப் பொருளாளராகவும் கொண்ட பள்ளி நிர்வாக குழுவினரின் சேவை பாராட்டத்தக்கது. இவர்களது அயராத உழைப்பினால் முதலில் ஒரு நடுநிலைப் பள்ளியாக ஆரம்பித்து இயங்கச் செய்து இவர்கள் ஐந்தே ஆண்டுகளில் பள்ளியினை படிப்படியாக உயர்நிலைப்பள்ளியாகவும், பின்னர் மேல்நிலைப் பள்ளியாகவும் உயர்த்திட வேண்டி தமிழக அரசின் கல்வித் துறையினரின் ஒப்புதலுக்கு உரிய படிவங்களில் உரிய சமயத்திலேயே விண்ணப்பித்தும் அதற்குரிய இடவசதி அறிவியல் ஆய்வகம், மற்றும் நூலகம் போன்றவற்றை ஏற்படுத்திக் காட்டி தமிழக அரசு கல்வித்திரையின் நன்மதிப்புடன் 1985-86ம் கல்வி ஆண்டிலிருந்து உயர்நிலைப் பள்ளியாகவும் 1988-99ம் கல்வி ஆண்டிலிருந்து மேல் நிலைப் பள்ளியாகவும் இப்பள்ளி இயங்க தமிழக அரசின் அங்கீகாரம் பெற்று தந்து தம் இன வழித் தோன்றல்களுக்கு பொது வாழ்வில் செம்மையாக செயலாற்ற நல்வழிகாட்டிகளாக விளங்கும் இச்சதனையாளர்களுக்கு இச்சமூகம் என்றென்றும் புகழாரம் சூட்ட கடமைப்பட்டுள்ளது என்றல் மிகையாகாது.

சென்னை மாநகர் 24 மனை தெலுங்கு செட்டி கல்விக்குழுவிலிருந்து 1988-89 முதல் மூன்று கல்வி ஆண்டிற்கென தேர்ந்தெடுத்தனுப்பியுள்ள ஆறு நபர்களையும் பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மூத்த ஆசிரியர்கள் மூன்று பேர்,அலுவலகப் பணியாளர்கள் சார்பாக ஒருவர், பெற்றோர் சார்பாக ஒருவர் கொண்ட புதிய பள்ளி நிர்வாகக்குழுவின் கீழ் 1988-89-ம் கல்வி ஆண்டிலிருந்து இப்பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக மூன்று கல்வி பிரிவுகளைக் கொண்ட பிளஸ் -1 வகுப்புகளுடன் சிறப்பாக துவங்கி 1989-90ம் ஆண்டில் இருந்து பிளஸ் -2 வகுப்புகளும் துவங்கப் பெற்று முழுமையுள்ள மேல்நிலைப்பள்ளியாக இப்பள்ளி சிறப்பாக இயங்கி வருகிறது.

இப்பள்ளி கல்வித் பணியினைச் சீரும் சிறப்புமாக தொடர்ந்து ஆற்றிடும் வகையில் சென்னை மாநகர் 24 மனை தெலுங்கு செட்டி கல்விக்குழு மற்றும் பள்ளி நிர்வாகி குழுவினருக்கு சிறந்த ஒத்துழைப்பு நல்கும் சிங்காரத்தோட்டம் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் இளைஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் வள்ளல் எஸ்.ஐ அழகர்சாமி செட்டியார் தர்மகல்விஸ்தாபன டிரஸ்டிகளுக்கும் இக்கல்விக்குழு என்றென்றும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது.

மற்றும் 1990-91 ஆண்டில் திரு.என்.பி.இராஜா துறைமுகம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.A.செல்வராஜ் அவர்கள், பள்ளிக்குழுச் செயலாளர் திரு.S.P.இராமசாமி, கல்விக்குழுச் செயலாளர் S.கோவிந்தராஜ் ஆகியோரின் முயற்சியாலும் கல்விக்குழு தலைவர் திரு.T.K.M.ராஜீ, துணை தலைவர் திரு.பாலகிருஷ்ணன், துணைச் செயலாளர் திரு.D.போஸ், A.செல்வம், துணைத்தலைவர் திரு.A.வாலன் ,துணைச்செயலாளர் திரு.K.கோவிந்தசாமி, பொருளாளர் திரு.G.ஆறுமுகம், உறுப்பினர்கள் திரு.K.வெள்ளைச்சாமி, திரு.R.ரெங்கசாமி, திரு..புஸ்ப K.கோவிந்தராஜ் ஆகியோரின் உறுதுணையாலும் ஆங்கில போதனா மொழிப் பாடத் திட்டம் போதிக்க அனுமதி பெற்று 6 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை போதிக்கப்படுகிறது.

புதிய கட்டிடம் திறப்பு விழா (1998)

சென்னை மாநகர் 24 மனை தெலுங்கு செட்டி கல்விக்குழு, பள்ளிக்குழு கௌரவத் தலைவர் திரு.S.D.முத்துராஜ், தலைவர் திரு.லயன் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் திரு.புஷ்பகோவிந்தராஜ், செயலாளர் திரு.D.போஸ், துணைச்செயலாளர் திரு.A.C.ராமசாமி, பொருளாளர் திரு.வி.பி.மோகன், பள்ளிக்குழுத் தலைவர் திரு.A.செல்வம், துணைத் தலைவர் திரு.V.கருப்பையா, செயலாளர் திரு.S.கோவிந்தராஜ், துனைச்செயலாளர் திரு.S.M.செல்வராஜ், பொருளாளர் திரு.A.பொன்னுராஜ் மற்றும் பள்ளிக்குழு உறுப்பினர் திரு.R.சுந்தரமூர்த்தி, சிங்கராத் தோட்டம் 24 மனை தெலுங்கு செட்டியார் இளைஞர் சங்க நிர்வாகிகள் ஆகியோரின் முயற்சியினால் பொறியாளர் திரு.புஷ்பக் கோவிந்தராஜ் அவர்கள் அன்பளிப்பாக வடிவமைத்து தந்த வரைபடத்தின் படி இம்மேல்நிலைப்பள்ளி முதன்மைக் கட்டிடத்தின் வடபகுதியில் ஒரு புதிய கட்டிடம் ஒப்பந்த பொறியாளர்கள் திரு.வி.கோவிந்தராஜூலு & திரு.G.உமாபதி அவர்களால் கட்டப்பட்டு 29.4.1998 அன்று கல்வி அமைச்சர் மாண்புமிகு K.அன்பழகன் அவர்களால் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. அவ்வமயம் சமூக நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திருமதி.S.சற்குணபாண்டியன் அவர்கள் மேற்படி விழாவில் கல்வெட்டையும், பெங்களூர் திரு.டி.பாலகிருஷ்ணா அவர்கள் வள்ளல் எஸ்.ஐ அழகர்சாமி செட்டியார் திரு உருவப் படத்தையும் கல்விக்குழு,பள்ளிக்குழு கௌரவத் தலைவர் திரு.S.D.முத்துராஜ் அவர்கள் அமரர் கட்பீஸ் G.வரதன் அவர்கள் திரு.உருவப்படத்தையும் திறந்து வைத்தார்கள்.

INAUGURAL FUNCTION OF EXTENSION BUILDING

We are very proud to open the extension building of 12800 sq.feet at Adam street in Royapuram, Chennai-13. On 15.07.2012 Honourable speaker of Tamilnadu Legistative Assembly Thiru.D.Jayakumar layed the foundation stone for the extension building. The Building was designed and constructed by Engineer Thiru.G.Umapathy. With the help of over solicitous people the school extension building was completed and running successfully at the same place.

The Managing trustee VALLAL S.I A C Educational Trust by Thiru.G.Shanmugam chettiar Inagurated the Prominent building.

வள்ளல் எஸ். ஐ அழகர்சாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி

வெள்ளி விழா ஆண்டு

16.10.2008 அன்று சென்னை-2, கலைவாணர் அரங்கம் வளாகத்தில் நடைபெற்ற வள்ளல் எஸ்.ஐ அழகர்சாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளியின் இருபத்தைந்தாம் ஆண்டு வெள்ளிவிழா சீரும் சிறப்புடன் நடைபெற்றது.கல்விக்குழுத் தலைவர் திரு.A.செல்வம் செட்டியார் தலைமை வகித்தார். பள்ளிக்குழுச் செயலாளர் திரு.V.B.மோகன் வரவேற்புரையாற்றுனார்.

இவ்விழாவில்,தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மற்றும் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் திரு.M.பழனிச்சாமி, சென்னை கிழக்கு கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் முனைவர் திரு.திருஞானசம்பந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வெள்ளிவிழா மலரினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்

திரு.Dr.V.V.முத்துசாமி அவர்கள் வெள்ளிவிழா மலரினை பெற்றுக் கொண்டு. விழாவில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும், விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ / மாணவியர்களுக்கு, 100 சதவீத தேர்ச்சி விழுக்காடு பெற்று தந்த ஆசிரியர்களுக்கும், அனைத்து ஆசிரியர் அலுவலகப்பணியாளர்களுக்கும், நினைவு பரிசுகளையும் வழங்கினார். விழாவில் கல்விக்குழு, பள்ளிக்குழு, இளைஞர் சங்கம் மற்றும் தர்மகல்வி ஸ்தாபன நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியில் கல்விக்குழுத் செயலர் திரு.D.போஸ் நன்றியுரை கூற நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

Copyright 2021 VALLAL S.I ALALAGARSAMY CHETTIAR HSS. All Rights Reserved. Designed & Developed by InnovTouch Technologies